ஊரடங்கு காலத்தில் சாலைகளில் ஆதரவின்றி திரிபவர்களை மீட்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. என்ஜிஓ காலனி பேருந்து நிலையம் முன்பாக ஆதரவற்ற நிலையில் ஒரு மூதாட்டி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் நேரில் வந்து மூதாட்டியை பார்த்து விசாரித்தார்.
விசாரணையில், மூதாட்டி சுத்தமல்லியில் அவர் பேரன் வீட்டில் தங்கி இருந்ததாகவும், ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் இங்கே வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதையடுத்து மாநகராட்சியுடன் இணைந்து ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லங்கள் நடத்தி வரும் தன்னார்வலர் சரவணன் தனது குழுவினருடன் வந்து மூதாட்டியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று சுத்தமல்லியில் உள்ள அவரது வீட்டில் சேர்த்தார். அவருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான பலசரக்கு மற்றும் உணவுத் தேவைக்கான பொருட்களை வழங்கப்பட்டது.

இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். உறவினர்கள் இருக்கும் நபர்கள் அவர்கள் உறவினர்களிடம் சேர்க்கப்படுவர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












