நெல்லையில் ரோட்டில் நின்றவர்களை வெட்டிய ‘ரோக்’குகள் 4 பேர் கைது

0
145
Oplus_131072

நெல்லை மானூர் அருகே தெற்குப்பட்டியில் ரோட்டில் நின்றவர்களை நேற்று பைக்கில் வந்த சிலர் அரிவாளால் தாக்கி விட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில் ஆலங்குளம் அருகே உள்ள நெட் ஊரிலும் இதுபோன்று இதற்கு முன்பு நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதனை நிகழ்த்தி இருக்கலாம் என்று தெரியவந்தது. அதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் இன்று இரு சம்பவங்களிலும் தொடர்புடைய 4 பேரை இன்று கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here