பாளை அருகே திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணாபுரம் ஆதிபராசக்தி நகரில் டாஸ்மாக் பாரில் மது அருந்தி போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் முகத்தில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் உயிரிழந்த வாலிபர் மேலப்புத்தனேரி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (25) என்பது தெரிய வந்தது. மேலும் அவருடன் வந்த நபர் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.















