டெல்லியில் நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்

0
1148

டெல்லி மற்றும் புறநகர் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டு உள்ள தகவலில் ரிக்டர் அளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானின் லாகூருக்கு வடமேற்கில் 173 கி.மீ. தூரத்தில் ஏற்பட்டு உள்ளது என கூறி உள்ளது. அந்த தாக்கம் டெல்லியில் உணரப்பட்டு உள்ளது.

சில நொடிகள் நீடித்த இந்த நடுக்கம் மாலை 4:35 மணியளவில் உணரப்பட்டதாக டெல்லியில் பலர் தெரிவித்தனர்.

நாடாளுமன்றம், பிரஸ் கிளப் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here