தலை முடியால் ஹீரோவான சீயான் மருமகன்

0
1233

விஜய் ஸ்ரீ ஜி பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் சியான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இது குறித்து விஜய் ஸ்ரீ ஜி கூறுகையில், “என் பிஆர்ஓ தான் அர்ஜுமனை அறிமுகம் செய்தார். அர்ஜுமன் நடிகர் விக்ரமின் தங்கை மகன். அர்ஜுமனுக்கு நடிப்பில் உள்ள ஆர்வத்தால், நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுக் கொண்டவர்.

அவரது தோற்றம் குறிப்பாக சிகை அலங்காரத்தை பார்த்த போது தான், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்பதை முடிவு செய்தேன். ஆதலால், அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறேன் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here