ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்களை குடும்பத்தினருடன் சென்று வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்
‘கூட்டுறவுத்துறை புகார் இருந்தால் தற்போதைய அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கலாம். எங்கள் மீது வழக்கு தொடுக்கலாம்.
ஆண்டவனே செய்தாலும் தவறு தவறு தான் என்ற ரீதியில்அதிமுக கட்சியையும் ஆட்சியையும் நடத்தினோம்.
.
எங்கள் ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட, மாநில கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் படுத்தப்பட்டுள்ளன. காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவு விவசாயிகளுக்கு கடன் பெற்றுக் கொடுத்தது எங்களுடைய ஆட்சிதான்.
திமுக ஆட்சியை குறை சொல்ல விரும்பவில்லை, அமைச்சர்கள் தெரிந்து கொண்டு பேசினால் போதும் என கூறுகிறோம்.
முந்தைய ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் திறக்ககூடாது என தற்போதைய முதல்வரின் குடும்பமே தெருவில் போராட்டம் நடத்தினார்கள். தற்போது டாஸ்மாக் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது.
தமிழ் கலாச்சாரத்தை, இலக்கியத்தை இதுவரை எந்தப்பிரதமரும் பேசியதில்லை. தமிழை பற்றி, தமிழர்களை பற்றி பேசும் ப நல்ல பிரதமர் மோடி.
பிரதமரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அதிகளவில் தடுப்பூசிகளை பெறுவார் என மக்களோடு சேர்ந்து நாங்களும் நம்புகிறோம்.
வணிக வரித்துறை அமைச்சர் மதுரையில் டிரான்ஸ்பார்மருக்கு மாலை போட்டு திறந்து வைத்திருப்பது சற்று தூக்கலாகவே தெரிகிறது.
மதுரையில் இரண்டு அமைச்சர்களில் வணிகவரித்துறை அமைச்சர் சிறப்பாக பணி செய்து செய்கிறார்.
எங்கள் ஆட்சி தற்போதும் தொடர்ந்திருந்தால் மதுரையை வேறு மாதிரி மாற்றியிருப்போம்’ என்றார்.
சசிகலா பற்றி கேட்டதும் சிறிது பதறியவர்,’ அவரது தொலைபேசி உரையாடலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருபெரும் தலைவர்கள் தலைமையில் கட்சி சென்று கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து எங்களுடைய பொதுக்குழு செயற்குழு கூடி முடிவெடுப்பார்கள். அதைப்பற்றி நான் கருத்து சொன்னால் சரியாக இருக்காது’ என சமாளித்தார்.












