நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்பட தமிழகத்தின் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
40-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. இதில் நெல்லையில் ரூ 60 ஆயிரம், தூத்துக்குடியில் இருந்து ரூ 53,000, தென்காசியில் ரூ 65,000 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே போல, சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












