எச்சமிட்ட காக்கா மீது இரக்கம் காட்டிய ஈபிஎஸ்

0
472

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது திருச்செந்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அவருக்கு தங்கம் முலாம் பூசப்பட்ட ஐந்து அடி தங்க வேலை வழங்கினர்.

பின்னர் அவர் வாகனம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு பேட்டி கொடுப்பதற்காக செய்தியாளர்கள் முன்பு வந்தபோது, மரத்தின் மேல் இருந்த காகம் ஒன்று அவரின் சட்டையில் எச்சமிட்டு விட்டது

இதனையடுத்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மரத்திலிருந்த காகத்தை விரட்ட முயன்றனர் அப்போது பெருந்தன்மையுடன் இபிஎஸ்,’ காகத்தை விடுங்கப்பா ‘ என்று கூறி கலகலப்புடன் பேட்டியை ஆரம்பித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here