நெல்லை மாநகர காவல்துறை புதிய ஆணையராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் .
நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக அன்பு பணியாற்றி வந்தார் . இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மண்டல ஐஜியாக பணிநியமனம் செய்யப்பட்டார்..
இந்நிலையில் நெல்லைக்கு மாநகரக்கு காவல் ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே இன்று தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக பணியாற்றி வந்த செந்தாமரைக்கண்ணன் நெல்லை மாநகர காவல்துறை புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.








