சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் கோவில் பிரசாதம்

0
1199

மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் 29வதாக பழனி பஞ்சாமிர்தமும் இதில் இணைகிறது

புகழ் பெற்ற பழனி பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்தது இந்த பஞ்சாமிர்தத்தம் முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது

திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லையாம் சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி கோரி, பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று ஜியாகரபிகல் இன்டிகேசன்ஸ் அமைப்பின் பதிவாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here