விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 21வது வார்டு மலையடிப்பட்டி பகுதி மக்கள் மக்களுக்கு, கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், காலி குடங்களுடன் மறியல் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
இந்த தகவல் அறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் கராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த பின்பு, சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.