திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திடீர் ஆய்வு செய்யச் சென்றார். அவர் அமைச்சர் என்று அறியாமலே அர்ச்சகர் ஒருவர் அவரிடம் ரூ 4000 தந்தால்தான் தரிசனத்திற்கு விட முடியும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கியுள்ளார்.
அவரிடம் பணத்தை ஜி பே மூலம் செலுத்தி விட்டு விட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
கோவில் வளாகம், அன்னதானம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்த அமைச்சர், அடிப்படை வசதிகள் குறித்தும், அன்னதான உணவின் தரம் குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார்
தரிசன ஏற்பாடுகள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பல முறைகேடுகள் தெரியவந்ததால் ஊழியர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.












