உத்தர்காண்ட் பனிமலை உடைந்து வெள்ளம்: 150 பேர் பலி?

0
537

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் உள்ள நானாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்தது.

ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது..

திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீட்பு பணியும் முடுக்கப்பட்டது.

ஆனாலும், ஆற்றங்கரையோரத்தில் இருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 150 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதற்கிடையே மாலை வரை 12 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அணை மின் திட்ட பணியில் இருந்த தொழிலாளர்கள் 20 பேர் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here