சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020இல் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இன்று தண்டனை விவரம் தெரிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ்,பாலகிருஷ்ணன் , மற்றும் முருகன், தாமஸ், வெயிலு முத்து, செல்லத்துரை, சாமத்துரை, முத்துராஜ் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டதால், அவர்களுடைய உடல்நிலை சிறையில் இருந்தபோது நன்னடத்தை ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு ஒன்றிய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதன் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடுமையான தண்டனையை எதிர்பார்த்த குற்றவாளிகள் தண்டனையை குறைக்குமாறு நீதிபதி முத்துக்குமரனிடம் கெஞ்சினர்.
இறுதியில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.















