தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே கடல் ஆனது அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவில் முதல் நாழிக்கிணறு வரை உள்ள 500 மீட்டர் தூரத்திற்கு கடல் ஆனது சுமார் 80 அடி உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.