கருப்பு கொடிகளுக்கு நடுவே கட்சி கொடி

0
770

நாங்குநேரி தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே வழக்கம்போல் தங்கள் கட்சி கொடியை கட்ட அரசியல் கட்சியினர் தயாரான நிலையில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளை இணைத்து ஒரே பெயரில் வழங்க அரசாணை பிறப்பிக்க கோரி அந்த சாதியின் அமைப்பினர் 30க்கு மேற்பட்ட ஊர்களில் கருப்பு கொடியேற்றினர்.
அடுத்து விஜயநாராயணம் குளத்தை ஆழப்படுத்தும் பணிக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதை கண்டித்து விஜயநாராயணம், ஐந்தாங்கால், ஏழாங்கால், பண்டாரபுரம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் கொடிகள் ஏற்றப்பட்டன.
நாங்குநேரி ஊருக்குள் விரைவு பேருந்துகள் வந்து செல்லவேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி நாங்குநேரி பேரூர் முழுவதும் கருப்பு கொடி கட்டினர்.
இப்படியாக, ஊர் முழுவதும் ஏற்றியதால் கருப்பு கொடிகளுக்கு நடுவிலேயே கட்சி கொடி பறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், சுதாரித்துக்கொண்டு பிரச்சினைக்குரிய பகுதிகளுக்கு சென்று பேசி தீர்க்க முயல்கிறார்கள்.
என்றாலும், ‘இப்போது விட்டுக்கொடுத்தால் எப்படி நிறைவேற்றுவார்கள்?’ என்று எண்ணும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக நிற்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here