தென்காசி அருகே இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியது ஆறு பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் நேருக்கு நேர் மோதியது இதில் இரண்டு பஸ்களும் பலத்த சேதமடைந்தது பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளின் ஆறு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த தென்காசி எஸ் பி அரவிந்த் மற்றும் எலத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் 108 வாகனம் மூலம் பலத்த காயம் அடைந்தவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது இறந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை காயமடைந்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.












