உறைவிடப்பள்ளியில் புதைக்கப்பட்ட 215 குழந்தைகள்

0
965கனடாவில் இளவரசர் எட்வர்ட் தீவில் உள்ள சார்லோட்டவுனில், விடுதியுடன் கூடிய கேம்லூப்ஸ் என்னும் பழைய உறைவிடப் பள்ளியில் 215பழங்குடி சிறு குழந்தைகளின் புதையுண்ட எச்சங்கள் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பாலான உடல்கள் 3 வயதுடையவை . இதனால் அங்கு பழங்குடி மக்களிடையேகொந்தளிப்பு எழுந்தது.


1890ல் கனடாவில் இத்தகையை பள்ளிகள் கத்தோலிக்க திருச்சபயினரல தொடங்கப்பட்டது. அங்கு படித்த குழந்தைகள் துன்புறுத்தலுக்குள்ளாகி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என விசாரணையில் தெரியவ்ந்துள்ளது. மேலும், 4,100 முதல் 6ஆயிரம் வரை குழந்தைகள் இத்தகைய பள்ளிகள் பலவற்றில் கொலையுண்டிருக்கலாம் எனவும் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆணையம் கூறுகிறது.
கடந்த 1831 முதல் 1996 வரை குடும்பங்களில் இருந்து பிரித்து கொண்டுவரப்பட்ட பழங்குடி பிள்லைகள் இங்கு படிப்பிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், பல்வேறு உடல் சார்ந்த துனபங்களை எதிர்கொண்டுள்ளன.


இந்த துயரகரமான கண்டுபிடிப்பால் அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து ஆய்வு நடத்தி உண்மைகளை முழுமையாக கொண்டுவருவதாக உறுதியளித்தார், அதுமட்டுமின்றி, அந்தப் பிராந்தியங்களில் கனட நாட்டு கொடு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அப்பள்ளி முன்பு சிறுவர்களுக்கான ஷூக்களை நினைவுக்காக வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


இவ்வளவு நடந்தும் கத்தோலிக்க திருச்சபை சார்பில் இதுவரை இதற்கான வருத்தம் தெரிவிக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here