துப்பாக்கி சுடுதலில்
முதல் சுற்றில் முதல் இடம் பிடித்தவர்கள், இரண்டாம் சுற்றில் ஏழாம் இடம்பிடித்து வெளியேறினர்.
மனு பாகெர் இந்தியாவின் மிகப்பெரிய ஒலிம்பிக் நம்பிக்கை. ஆனால், ஒரு 8 அவர் வாழ்வில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

பெண்களுக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில், அவருடைய கடைசி சீரிஸில் கடைசி வாய்ப்பில் 10 ஷாட் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. மனுவுக்கு அதெல்லாம் பழக்கப்பட்டதே. பல முறை அப்படி இக்கட்டான சூழலில் 10 அடித்திருக்கிறார். ஆனால், இங்கே ஒலிம்பிக்கில் சொதப்பினார். 10 க்கு பதில் 8 அடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
இன்று முதல் சுற்றில் சௌரப் சௌத்ரி அளவுக்கு நன்றாக ஆடாவிடிலும், மற்றவர்களை விட நன்றாகவே ஆடியிருந்தார் மனு. ஆனால், முக்கியமான இரண்டாம் சுற்றில் சௌரப் பத்து பத்தாக அடித்து துவம்சம் செய்ய, மனு மூன்று 8 ஷாட்களை அடித்து ஏமாற்றினார்.
டேபிள் டென்னிஸ் 3ஆவது சுற்று போட்டியில் சின வீரர் மா லாங்க்கு எதிரான ஆட்டத்தில் 4-1 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சரத் கமல் தோல்வியைத் தழுவினார்.
ஆரம்பத்தில் மிகவும் ஆக்ரோஷமாக ஆடிய சரத் கமல் 11-7, 8-11, 13-11,11-4,11-4 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார்.

10 மீ ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவில் போட்டியிலும் இந்திய முதல் சுற்றோடு வெளியேறியது.
இளவேனில்-திவ்யான்ஷ், தீபக் குமார்-அஞ்சும் இரண்டு இணையும் தோல்வி. இவர்களும் எதிர்பார்க்கப்பட்டவர்களே.












