கன்னியாகுமரியை சேர்ந்த ரவிச்சந்திரன் நாயர் என்பவர
மகன் ராகேஷ் (30 ).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அப்போது அதே மசாஜ் சென்டரில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புண்ணியகோடி என்பவரின் மகள் ஜெயந்தி (27) என்பவரும் பணிபுரிந்து வந்தார். ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் பணிபுரியும் இடத்தில் ராகேஷ்க்கும் ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து உள்ளனர். மேலும் இருவரும் ஒரே அறையில் தங்கத் துவங்கினர். திருமணம் செய்யாமலேயே கணவன்-மனைவியாக இருவரும் வாழத் துவங்கினர். இந்த சமயத்தில் ராகேஷ் ஜெயந்தி இடம் இருந்து 18 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கி தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இந்தியா திரும்பியதும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ராகேஷ் வாக்குறுதி அளித்தார். இதையும் நம்பி ஜெயந்தி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் .
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ராகேஷ் இந்தியா திரும்பினார். அதே சமயத்தில் ஜெயந்தியும் இந்தியா திரும்பினார் . அதன்பிறகு ராகேஷ் பெற்றோர்
ஏற்பாடு செய்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுபற்றிய தகவலை ராகேஷ் ஜெயந்தியிடமிருந்து மறைத்துள்ளார்
.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயந்தி ராகேஷ் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார் .இதையடுத்து வேறு வழியில்லாமல் ராகேஷ் தான் சொந்த ஊருக்கு வந்த சமயத்தில் பெற்றோர் வற்புறுத்தியதன் பெயரில் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி அவரிடம் போனில் சண்டை போட்டுள்ளார். பிறகு தான் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருவதாகவும் அவரும் கோவைக்கு வரவேண்டுமென்று ஜெயந்தி ராகேஷ் இடம் கூறியுள்ளார். இதையடுத்து ராகேஷ் நேற்று கோவைக்கு வந்தார். ஜெயந்தி பீளமேடு பகுதியில் உள்ள தனியார் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கு வந்த ராகேஷ் ஜெயந்தியை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் ஜெயந்தி சமாதானம் அடையவில்லை. அதேபோல தான் கொடுத்த 18 லட்ச ரூபாய் பணத்தையும் திருப்பித் தருமாறு ஜெயந்தி கேட்டுள்ளார். இதையடுத்து இருவ ருக்கும் தகராறு ஏற்பட்டது.
தன்னை திருமணம் செய்யாமல் தன்னிடமிருந்த சம்பாதித்த பணத்தை எலலாம் ஏமாற்றிப் பறித்த உன்னை சும்மா விட மாட்டேன் என்று கூறிய ஜெயந்தி தனது ஹேன்ட் பேக்கில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து ராகேஷ் முகத்தில் ஊற்றினார். இதில் ராகேஷ் முகம் மற்றும் கண்ணில் காயம் ஏற்பட்டது. ராகேஷ் முகத்தில் ஆசிட் பட்டதால் அலறி துடித்தார். அப்போதும் ஆத்திரம் தீராமல் ஜெயந்தி ராகேசை அடித்து உதைத்தார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார் .இதில் ராகேஷ் கையில் கத்திக்குத்து காயங்கள் பட்டது.
இவரது அலறல் சத்தம் கேட்ட சர்வீஸ் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி ஜெயந்தி தங்கியிருந்த அறைக்கு ஓடி வந்தார். அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு ரத்த காயங்களுடன் இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஜெயந்தி தூக்க மாத்திரை மற்றும் எலி மருந்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினார். அந்த இடம் களேபரமாக ஆனதை அடுத்து சர்வீஸ் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முகத்தில் காயம் பட்ட ராகேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல தூக்கமாத்திரை மற்றும் எலி மருந்து குடித்து மயங்கி கிடந்த ஜெயந்தியை மீட்டு அவினாசி ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் 18 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் ராகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதைப்போல ராகேஷ் தன்மீது ஆசிட் வீசி கொலை செய்ய முயற்சி செய்ததாக ஜெயந்தி மீது அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












