தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மெட்டில்டா என்பவரின் கணவர் ஜேம்ஸ் சித்தர் இடத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை சர்ச் தெருவையை சேர்ந்த ஜேம்ஸ் சித்தர் செல்வன் (57). இவரின் மனைவி மெட்டில்டா ஜெயராணி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குடும்பத்தினர் தட்டார்மடம் காவலர் குடியிருப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜேம்ஸ் சித்தர் செல்வனின் இடம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த ஜேக்கப் (44) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததது.
இன்று ஜேம்ஸ் சித்தர் புத்தன்தருவைக்கு சென்ற போது அங்கு வந்த ஜேக்கப் – ஜேம்ஸ் சித்தர் இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த ஜேக்கப் ஜேம்ஸ் சித்தரை அறிவாளால் வெட்டி உள்ளார்.
இதில் பலத்த காயம்படைந்து சரிந்த ஜேம்ஸ் சித்தரை அப்பகுதி மக்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.
அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான ஜேம்ஸ்சை தேடி வருகின்றனர்.









