ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் இன்பதுரை வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், அக்.4ந்தேதி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மறு எண்ணிக்கை நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை பரிசீலனை செய்ய எம்.எல்.ஏ. இன்பத்துரை கோரிக்கை விடுத்தார். தேர்தல் ஆணையமும் வாக்கு எந்திரங்களை நீதிமன்றத்துக்கு கொண்டுவர அவகாசம் கேட்டது. இதையடுத்து இதுகுறித்து அப்பாவு பதிலளிக்குமாறு கூறி, அக்.4ஆம்தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்தது.