ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா அறக்கட்டளையால் யானை வழித்தடங்களும் நீர்வழிப் பாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. அதையெல்லாம் அரசுத்துறை அதிகாரிகள் பூசி மெழுகி விடுவார்கள்.
தற்போது, தனது குழந்தைகளை மூளை சலவை செய்து மொட்டை அடித்து வைத்திருப்பதாக பேராசிரியர் ஒருவர் தொடுத்த வழக்கிலும், தமிழ்நாட்டு போலீசார், நீதிமன்றத்தில் ஒன்றும் வெளியில் ஒன்றும் ஆக தகவல் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும்,’ ஈஷாவில் ஏதோ நடக்கிறது, மர்மமாய் இருக்கிறது’ என்று பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒன்றிய மாநில அரசு துறையினர் தீவிர விசாரணை செய்வதில்லை என்பதுதான் வேதனை.
இந்நிலையில், ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக முன்னாள் ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர் .
ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா ஹோம் ஸ்கூலின் முன்னாள் ஆசிரியை யாமினி ரகானி மற்றும் அவரது கணவர் சத்ய என் ரகானி ஆகியோர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’ஈஷா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்’ எனக் கூறினர்.

பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் பேசிய ஆடியோவில், ‘நாங்கள் ஏழு ஆண்டுகளாக ஈஷா தொண்டர்களாக இருந்தோம். எங்கள் பெண் குழந்தையை வீட்டுப் பள்ளியில் சேர்த்தோம். நாங்கள் ஜக்கி பாபாவை கடவுளாக நம்பினோம், முழு நம்பிக்கையுடன் சேவை செய்தோம்.
ஆனால் அவரும் அவருடைய ஈஷா அறக்கட்டளையும் எங்கள் மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா பள்ளியில் வீட்டுப் பள்ளி ஆசிரியரால் எங்கள் மகள் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.. எங்கள் மகள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்.
சிறப்பு விசாரணை நடத்தி அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்













