பாளை.யில் திடீரென தீப்பிடித்த கார் – உரிமையாளர் குடும்பத்துடன் குதித்து தப்பினார்

0
956

இன்று முற்பகலில் பாளையங்கோட்டை ரயில் நிலையத்திற்கு
அருகில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக தகவல் பெறப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர்.

விசாரணையில், பாளையங்கோட்டை என் ஜி ஓ பி காலனி ராமச்சந்திரா காலனியைச் சேர்ந்த டேனியல் கிறிஸ்டோபர் என்பவர் பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்தக் காரில் குடும்பத்தோடு சர்ச்சுக்கு சென்று ஜெபத்தில் கலந்து கொண்டு திரும்பும்போது பாளையங்கோட்டை ரயில் நிலைய ரோட்டினில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

அதிர்ஷ்டவசமாக அவர் மற்றும் மனைவி குழந்தைகள் உயிர் தப்பினார்கள்..
பாளையங்கோட்டை உதவி அலுவலர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here