குடிபோதையில் தவறி விழுந்த பெண் சாவு

0
517


 ஒண்டிப்புதூர் அடுத்த ஆஞ்சநேயர் காலனி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (54) .இவரது மனைவி உமா 47. உமாவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக குடிப்பழக்கம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று வீட்டின் அருகில் குடிபோதையில் மயங்கி விழுந்தார். அதில் உமாவிற்கு மூக்கு மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது .இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here