பேரூரை அடுத்த தீத்திபாளையம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின் மனைவி திவ்யா (40 ).இவரது கணவர் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு அவரது மகன் மனோஜ் குமாருடன் (21) வசித்து வந்தார். தாயும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மனோஜ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமுடி அதிகமாக கொட்டுகிறது என்றும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் அவரது அம்மா திவ்யாவிடம் கேட்டுள்ளார். மேலும் புதிய செல்போன் ஒன்று வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு அவரது அம்மா திவ்யா தற்போது பணமில்லை என்று கூறி பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இதனால் மனோஜ்குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தார் .இந்நிலையில் திவ்யா வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த வந்த மனோஜ்குமார் எலி விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மனோஜ் குமாரை அழைத்து சென்றனர் .ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் மனோஜ்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார்.









