கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு

0
1296

அருமனை வாழவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 34). இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அருமனை சந்திப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்வத்திடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.600-ஐ பறித்துச் சென்றார்.

இதுகுறித்து அருமனை போலீசில் செல்வன் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வனை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது, திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here