ஒருநாள் காய்சல்…ரூ.1 லட்சம் பீஸ்

0
1307

ஒரு நாள் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தியதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், முதன் முதலாக இயக்கியுள்ள படம் ’மெய்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வருகிறது.

இதனிடயே இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:- ”காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தினேன்.

மருத்துவர்களின் கட்டாயத்தின் பேரில் பலமுறை தேவையற்ற பரிசோதனைகளை செய்து கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தது. மருத்துவத்துறையில் மலிந்து கிடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்” இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here