,
கோவை அடுத்த வேலாண்டிபாளையம் மஞ்சேஸ்வரி காலனி, மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். ஆட்டோ டிரைவர்.இவரது மனைவி செல்வி(45.) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று ஆனந்தகுமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார் .மனைவியுடன் தகராறு செய்தார்.அப்போது அவரது மனைவி நீங்கள் ஏன் மற்றொரு பெண்ணுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்று கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார் கத்தியால் செல்வியை குத்தினார்.இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் செல்வி இறந்து விட்டார்.
இந்தநிலையில் ஆனந்தகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், பாண்டியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து கணவர் ஆனந்த குமாரை தேடி வருகிறார்கள்.














