6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 30 வயது காமுகன் கைது

0
418

ராணிப்பேட்டை அருகே மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்(30). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது குழந்தையின் முகத்தை கைகளால் மூடி தனது வீட்டின் அருகே இருந்த முட்புதரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை காணாததால் குழந்தையின் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர். இது குறித்து அறிந்த முருகன் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றான். இந்நிலையில் குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது குழந்தைக்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில்அனைத்து மகளிர் காவல் துறையினர் முருகனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ்சிறையிலடைத்தனர்.

இதேபோல் ஆற்காடு தஞ்சாவூரான் காலனி பகுதியில் பதினேழு வயது சிறுமியை மூன்று மாதங்கள் கர்ப்பமாக்கிய தமிழரசன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் .ஒரே நாளில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறை துறையினர் இரண்டு பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.கைதான இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here