இந்தி தினத்தையொட்டி பாரதீய ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும் என்று கூறி இருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடிய திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூ கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.