வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு திரளானோர் அஞ்சலி

0
485

மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு திரளானோர் அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிலை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன். இவர் தமிழகத்தில் முதன் முதலில் வியாபாரிகளை ஒன்றிணைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை என்ற அமைப்பை தொடங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் ஒன்றிணைத்து வியாபாரிகளுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது பொதுமக்கள் நலனில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அதனை அரசுக்கு எடுத்துரைத்தும், பல்வேறு சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு அதற்கு தீர்வுகளை கண்டு வந்தவர். இந்த நிலையில் அவர் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் அவரது சொந்த கிராமமான பிச்சிவிளை கிராமத்தில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்காக அவரது சொந்த ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவரது உடலுக்கு அவரது ஊரைச் சேர்ந்த பொதுமக்கள், உறவினர்கள், பல்வேறு தரப்பைச் சேர்ந்த வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது உடல் இன்று மதியத்திற்கு மேல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here