கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் அக்பர் கடத்தப்பட்டார். தேசிய புலனாய்வு அதிகாரி போல் நடித்து அவரை பயங்கரவாதியாக கருதப்பட்ட தவ்ஃபீக் கடத்த ரூ.3 கோடி பணம் பறித்தார்.
அந்த வழக்கில் தவ்ஃபிக்கின் மனைவி சல்மா, கட்டை காதர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.தவ்ஃ பிக்கை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.லுக் அவுட் நோட்டீசும் பிறப்பித்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வவடக்கு கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலைய அதிகாரிகளால் அவர் மடக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் அக்பர் கடத்தலுக்கு பிறகு மூன்று கோடி ரூபாய் பணத்துடன் பங்களாதேஷிற்கு சென்று வாழ்ந்துள்ளார்.
.இந்நிலையில் கடத்தல் சம்பவத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த தவ்ஃ பிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
தவ்ஃபிக் மீது 14 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ளது. 2002 ல் மும்பையில் பேருந்தில் குண்டு வைத்த வழக்கும் உள்ளது.
முதன்முறையாக உத்திரப்பிரதேசம் நொய்டாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃ பிக் 2015 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளி வந்த பின்பு ‘நாம் மனிதர் கட்சி’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தார்.இறைவன் ஒருவனே மற்றும் இஸ்லாமிய தற்காப்பு படை போன்ற அமைப்புகளையும் உருவாக்கி, ஆள்சேர்க்கும் , நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்துள்ளது.