அண்மையில், தமிழ்நாட்டிலுள்ள 50க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தும் முடிவுகளை எடுத்திருக்கிறது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
இந்நிலையில், புதிதாக 3 மாநகராட்சிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த 3 மாநகராட்சிகளையும் வட தமிழ்நாட்டில் உருவாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 3 நகராட்சிகளே மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












