திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை மத்திய சிறை உள்ளது. இங்கு இரண்டாவது கோபுரம் பிளாக்கில் இன்று காலை பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற வார்டன் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மதுரையைச் சேர்ந்த தண்டனை கைதி மீனாட்சி சுந்தரம் , சக கைதியான ராஜேஷை அடித்து, உதைத்துள்ளார். அதை தடுத்து சமாதானப்படுத்த சென்ற மகேந்திரனையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் மகேந்திரன் காயமடைந்தார். அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பெருமாள் புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.









