
சிவனுக்குரிய விரதமே மகா சிவராத்திரி நிகழ்ச்சி. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
இதில், விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இதனால் அண்டங்கள் தோன்றி உயிர்கள் வாழ இயங்கும் பொருட்டு அம்பிகை இறைவனை இடைவிடாது தியானம் செய்தாளாம். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்தாராம்.
தான் தியானித்துப் போற்றிய காலம் ‘சிவராத்திரி’ என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும், கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்றும் அம்பிகை இறைவனை பிராத்தித்தார். அவரும் அவ்வாறே அருள் புரிந்தாராம்.
ஆனால், சிவராத்திரியில் விரதம் இருப்பதை விட விழித்திருப்பதையே சைவர்களா வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதற்காக இரவு முழுவது முன்பு திரையரங்கு இயங்கும். இப்போது கோவை ஈஷா மையத்தில் ஜக்கி வாசுதேவ் கலவையான கலை நிகழ்ச்சி நடத்தி சினவடியார்களை கவர்ந்து வருகிறார்.