அரசு இணைய பக்கத்தில் தமிழ் புறக்கணிப்பு: வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

0
1235

கொரோனா தடுப்பூசிக்கான கோவின்(Cowin) இணையதள பக்கத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்வதற்கான தகவல்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி இருப்பு, தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு போன்றவை இடம்பெற்றிருக்கும். மேலும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் முதல் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருக்கும்,

இந்த இணைய தள பக்கத்தில் நேற்றுவரை இந்தி , ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று கூடுதலாக மராட்டியம், தெலுங்கு, மலையாளம், பெங்கால், கன்னடம், ஒரியா, அசாமி உள்ளிட்ட 9மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் அதில் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தொன்மையான தமிழ்மொழியை உள்நோக்கத்தின் அடிப்படையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி இணையதளத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here