K
கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. துறைத் தலைவராக பணியாற்றும் பேராசிரியா் ரகுநாதன், தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலருக்கு தொடா்ந்து கைப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பி பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் மாணவ-மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
இந்நிலையில் பேராசிரியா் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் யு.ஜி.சி. வழிகாட்டுதலின்படி பேராசிரியா் மீதான புகாா் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவினா் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா்.
இதில் பேராசிரியா் ரகுநாதன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பேராசிரியா் ரகுநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.













