பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களான நெல்சன், ராபர்ட் ஆகியோர் 7ஆம் வகுப்பில் படித்த 3 மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்
இதுகுறித்து பெற்றோர் தலைமை ஆசிரியர் சாத்ராக்கிடம் புகார் செய்ததற்கு, அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அடுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மாணவர்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் ராபர்ட், நெல்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
உரிய முறையில் புகார் செய்தும், சமாளிக்க முயன்ற தலைமை ஆசிரியர், மாணவர்களை புகார் செய்ய வேண்டாம் என்று மிரட்டிய பள்ளி அலுவலக ஊழியர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









