சென்னையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

0
498

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளியான கமலேஷ் என்பவனை நேற்று முன்தினம் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளியான கமலேஷை சிறையில் அடைப்பதற்கு முன் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இன்று போலீசார் அழைத்து வந்தனர்.

மருந்துவமனைக்குள் நுழைந்ததும் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவரை சந்திப்பதற்கு முன் போலீசாரிடம் கமலேஷ் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. உண்மையாகவே கமலேஷ் கழிவறை செல்லத்தான் கேட்கிறார் என்று நம்பிய போலீசார் அவனை சென்றுவருமாறு கூறிவிட்டு கழிவறைக்கு வெளியில் காத்திருந்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் குற்றவாளி கமலேஷ் வெளியில் வராததால் சந்தேகமடைந்த போலீசார் கழிவறைக்குள்ச் சென்று பார்த்தபோது கமலேஷ் அங்கிருந்து தப்பிச்சென்றிருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மருத்துவமனையிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி தப்பிச் சென்ற குற்றவாளி கமலேஷை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here