அணு மின்தயாரிப்பில் அபாயமே அணுக்கழிவுகள்தாம். அதை கூடன்குளத்திலிருந்து பாதுகாப்பாக வேறிடத்துக்கு கொண்டுசெல்வோம் என அணு சக்தி துறை கூறியிருந்த நிலையில், அங்கேயே புதைக்க மறைமுக ஏற்பாடு நடந்தது.
இந்நிலையில், மக்களவையில் திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ‘கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது’ என்று பதிலளித்தார்.
கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் அடி தொலைவில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும். அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும் அவர் கூறியுள்ளார். –
ஆக, கூடன்குளத்தில் பூமிக்கடியில் பூதம் புதைந்துள்ளது உறுதியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சத்தொடங்கியுள்ளனர்.












