நெல்லை மாவட்டம் இட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மதபோதகரும் தன்னை பிஷப் என்று கூறிக் கொள்பவருமான காட்பிரே நோபுள் என்பவரின் மனைவி போட்டியிடுகிறார். மேலும் காட்பரே நோபுள் அங்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இருவரின் வெற்றிக்காக வாக்காளர்களை கவரும் விதமாக பிரியாணி ரூபாய் தலா 1,000 மற்றும் மது பாட்டில்கள் கொடுப்பதற்கு அந்த வேட்பாளர் ஏற்பாடு செய்துள்ளார்.
மது பாட்டில்கள் கொண்டு வரும் பொறுப்பை மதபோதகர் நெல்லையில் ஒருவரிடம் பெரும் தொகையை கொடுத்து ஒப்படைத்துள்ளார்.அவர் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு இட்டேரி நோக்கி செல்லும் போது கையும் களவுமாக மதுவிலக்கு போலீஸாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.
தற்போது மதுபாட்டில்கள் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் வார்டு வேட்பாளர் மதபோதகர் இந்த சம்பவத்திலிருந்து மறைக்கப்பட்டது போல தெரிகிறது. மதபோதகரை நேரில் அழைத்து விசாரிக்கும் சமயத்தில் மேலும் இந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








