சென்னை பள்ளிக்கூடத்தில் பாடப்புத்தகங்கள் திருட்டு

0
1049

சென்னை பம்மல் அடுத்த அனக்காபுத்துரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 6ம் மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதற்க்காக புதிய பாடதிட்டத்தின் புத்தகங்கள் பள்ளியின் அறை ஒன்றில் வைத்துள்ளனர் .

இன்று மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்வதற்காக ஆசிரியர்கள் பார்த்த போது அறையின் பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்பு உள்ளே சென்று பார்த்த போது புத்தகங்களின் முன் பக்கம் மற்றும் பின் பக்க அட்டைகள் கிழிக்கபட்டு மீதமுள்ளவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது

சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர்
சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலிசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் .

பாட புத்தகங்கள் பள்ளியில் இருந்து திருடபட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here