பெட்ரோல் விலை விலை உயர்வுக்கு காரணமாக மத்திய மாநில அரசுகளே கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மௌரியர் (முன்னாள் ஐ.பி.எஸ்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நீதி மைய கட்சியினர் கலந்து கொண்டு பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை வருடம் வாரியாக குறிக்கும் வகையில் ஏணி வடிவில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்பாட்டம் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதிமய்யம் கட்சியில் துணை தலைவர் (கட்டமைப்பு) மௌரியார். மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அறிவித்ததன் படி தற்போது ‘உருமாறிய மக்கள் நீதி மையம் ‘ஆக இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மக்களுக்காக நடத்தி கொண்டிருப்பதாகவும்,
35 ரூபாய்க்கு விற்கவேண்டிய பெட்ரோல்,டீசலை நூறு ரூபாய்க்கு விற்று மத்திய மாநில அரசுகள் கொள்ளை லாபம் பெறுவதாகவும்,
இந்த ஆர்ப்பாட்டத்தில் கமலஹாசன் கலந்து கொண்டால் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள்,அதனால் கொரோன மிகத் தீவிரமாக பரவிவிடும் எனவே அவர் மக்கள் நலன் கருதியே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறினார்.
மக்கள் நீதி மையத்தில் இருந்து பத்மபிரியா மகேந்திரன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு இதைத்தான் தலைவர் துரோகம் என குறிப்பிட்டிருந்தார் அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் அதோடு தலைவர் கமலுக்கு ஒரு நன்றி சொல்லட்டும் எனவும் கூறினார்.














