தமிழக முன்னாள் அமைச்சா் வேலுமணி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளநிலையில்,நேற்று தமிழ்நாடு முழுவதும் அவருடை வீடு,அலுவலகம்,அவரை சாா்ந்தவா்களின் தொழில் நிறுவனங்கள் உட்பட 60 இடங்களில் லஞ்ஞ ஒழிப்பு போலீசாா் அதிரடி சோதனைகளை நடத்தினா்.
அப்போது சென்னையில் எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கியிருந்த வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசாா் விசாரணையும் நடத்தினா். சோதனை நிறைவு பெற்றபிறகு நேற்று இரவு சென்னையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினாா்.
இந்நிலையில் வேலுமணி இன்று கோவை செல்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.ஆனால் அவா் இன்று காலை 6 மணி விமானத்தில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றுள்ளாா்.
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை விமான நிலையம் வந்தார்.
அவரை வரவேற்க ஐம்பதிற்கும் மேற்பட்ட அதிமுக ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். பின்னர் எஸ் பி வேலுமணி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் பொழுது அவரின் ஆதரவாளர்கள் ’கோவிந்தா, கோவிந்தா’ என கோஷம் எழுப்பினர்.