ஆயூர்வேத சென்டரில் ‘அந்த வித’ ட்ரீட்மென்ட் : பெண்கள் உட்பட 11 பேர் கைது

0
533

கோவை துடியலூர்   சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இது தொடர்பாக துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் அங்கிருந்து சிலர் அரைகுறை ஆடையுடன் தப்பி ஓட முயன்றனர்.

இது தொடர்பாக அவர்களை பிடித்து விசாரித்தபோது அங்கே தீபு மாத்யூ என்பவர் மசாஜ் சென்டர் வைத்து பாலியல் நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக அங்கிருந்த சென்னை குன்றத்தூரை  சேர்ந்த முல்லை ( 34), ஆந்திராவைச் சேர்ந்த நீருக்குட்டு காயத்ரி( 30 )கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த ராஜீ( 33 )அதே பகுதியை சேர்ந்த நிங்நிலர் என்ற ஜூலி(33) ஆகியோர் தெரிவித்தனர்.

இவர்களுக்கு சென்னையைச் சேர்ந்த பிரவீன் குமார்( 33) மதுரையைச் சேர்ந்த செல்வன் (52), துடியலூர் வி கே எல் நகர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ்( 54) ஆகியோர் ஆட்களை கூட்டிவந்து அங்கு வரும் நபர்களுடன் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கொடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு மஜாஜ் மற்றும் பாலியலில் ஈடுபட்டு இருந்த மசக்காளிபாளையத்தை சேர்ந்த குணசேகரன்( 32) சிங்காநல்லூரை சேர்ந்த கார்த்தி(31) கீரணத்தம் புதுப்பாளையத்தைசேர்ந்த ஜெகதீஸ்(30 )கணபதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(44) ஆகியோர் உட்பட 11 பேரை துடியலூர். சப் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள்,உயர்ரக ஆண் உறைகள்,ரொக்கம் ரூ 7000 யும் போலிஸார் கைப்பற்றினர்.மஜாஜ் செண்டர் நடத்தியதாக கூறப்படும் தீபுமாத்யூ என்பவரையும் போலிஸார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here