தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்ததாக பெரும் சர்ச்சை விவகாரம் எழுந்தது. இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர், தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்று தமிழகத்தில் சில இடங்களில் ஆசிரியர்கள் நடந்து கொள்வது தொடர்ந்ததால், தற்போது தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.