கடன் பிரச்னை: பெண் தற்கொலை

0
1227

ஆரல்வாய்மொழியை அடுத்த தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராஜனின் மனைவி ஷைலா (வயது 47). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராஜன்-ஷைலா தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார். தற்போது பிரசவத்திற்காக ஊருக்கு வந்துள்ளார்.

ஷைலாவுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்தார். இன்று காலை இவரது அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்பட வில்லை. இதனால் உறவினர்கள் அறை கதவை உடைத்து பார்த்தனர்.

அங்கு ஷைலா தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ் பெக்டர் மகேஷ்வர்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் ஆகியோர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here