ரயில் நிலையத்தில் கணவரை தவிக்கவிட்டு மணப்பெண்ணை கடத்தி சென்ற தோழி

0
501

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் வசித்து வருபவர் காமராஜ்(25). இவரது மனைவி ஷோபா(20). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் ஆவதற்கு முன்பு ஷோபா திருப்பூரில் உள்ள தனியார் பணியன் தொழிற்சாலையில் வேளை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேற்கு வங்கலத்தை சேர்ந்த பெண் ஜெய்ஸ்ரீ ராய் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பிறகு ஷோபா வேலைக்கு வராததால் அவரை பார்க்ககடந்த வாரம் ஜெய்ஸ்ரீ ராய் நாயக்கனேரி மலை கிராமத்திற்கு வந்து தொடர்ந்து தோழி உடன் பத்து நாட்கள் காமராஜ் வீட்டில் தங்கி இருந்த பின்னர் அவர் சொந்த ஊருக்கு கிளம்புவதாக கூறிவிட்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் சென்றுள்ளார்.

அப்போது ஷோபாவும் அவரது கணவர் காமராஜூம் வழியனுப்பி வைக்க உடன் சென்றுள்ளனர். ரயில் கிளம்ப சிறிது நேரத்துக்கு முன்பு தண்ணீர் பாட்டில் வாங்கி வருமாறு காமராஜிடம் ஜெய்ஸ்ரீ ராய் கூறியதால் காமராஜ் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றுள்ளார். ரயில் உடனே புறப்பட்டு உள்ளது.

அங்கு நின்றிருந்த ஷோபாவை காணவில்லை.

அதிர்ச்சியடைந்த காமராஜ் ரயில்வே போலீசாரிடம் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கொல்கத்தாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கணவனை ஏமாற்றி விட்டு தோழியை கடத்திச் சென்ற வடமாநில பெண்ணை பிடிக்கவும் ஷோபாவை அவரிடம் இருந்து மீட்கவும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here