கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் குமரிமாவட்டம் வழியே கேரளாவுக்கு பெருமளவு கடத்தல்கள் நடைபெற்று வருகின்றன. ரேஷன் அரிசி கடத்தல் , போதைப்பொருட்கள் கடத்தல், கனிம வள கடத்தல் என்று கடத்தல்களுக்கு பஞ்சமில்லை.
இந்நிலையில் இன்று குளச்சல் அருகே ரேஷன் அரிசியை கடத்துவதற்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு இருந்ததை வாகன பதிவு எண் விவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் குமரி மாவட்ட உளவுத்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரி களுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். ஆனாலும், அந்த வாகனத்தை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தகவல் தெரிவித்தவர் கூறியபோது, ‘ தற்போது கூட அந்த நேரத்தை கணித்து குளச்சல் வாணியங்குடி பகுதியிலிருந்து அந்த வாகனம் சென்ற வழியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதித்தால் அந்த வாகனத்தில் அரிசி கடத்தல் நடைபெற்றது தெரியவரும்’ என்றார்.
களியக்காவிளை இஞ்சி விளையில் சாகுல் என்பவருடைய அரிசி குடோனில் இரவு ஒன்பது மணிக்குள்ளாக அந்த வாகனம் உள்ளே சென்றுள்ளது. சுமார் 3,500 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது.
ஆகவே அரிசி கடத்தல் சம்பவத்தில் குளச்சல் வணியக்குடி பகுதியில் ஈடுபட்ட TN 75 AQ 8789 Ashok Leyland Dost வாகனம் மற்றும் அந்த வாகனத்திற்கு எஸ்காடாக சென்ற கார் ஆகியவை தேங்காய்பட்டணம், புதுக்கடை வழியாக கேரளாவுக்கு சென்றதாக கூறப்படுவதை சிசிடிவி பதிவுகள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கூற்றாக உள்ளது.